திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 75ஆவது பிறந்த நாள் நிகழ்வுக்காக அவரது வாழ்விணையர் மோகனாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட உண்மையான புகைப்படம் இதோ. (1)
இந்தப் புகைப்படத்தில் உள்ள மோகனா அம்மையாரின் நெற்றியில் பொட்டு வைத்து, புகைப்படத்தில் மோசடி செய்து, அந்தணர் குரல் என்ற இதழில் (பிப்ரவரி 2018) இப்படியொரு படத்தை வெளியிட்டு பெண்களுக்கு பொட்டு வேண்டாம் எனும் வீரமணி தன் மனைவிக்கு பொட்டு வைத்து அழகு பார்க்கிறார். இதுதான் அவரது பகுத்தறிவு என்று எழுதியுள்ளார்.(2)
அட அயோக்கிய மோசடி ஆரிய பார்ப்பனர்களே, உங்கள் பிழைப்பே பித்தலாட்டம், மோசடியில்தான் என்பதற்கு இது ஓர் சரியான சான்று.
மோகனா அம்மையார் எப்போது பொட்டு வைத்துக்கொண்டதில்லை. ஆசிரியரின் 75ஆவது பிறந்த நாளையொட்டி எடுக்கப்பட்ட படம் என்பதற்காக தோழர்கள் அவருக்கு பூ வைத்து அழகு பார்த்தனர். மற்றபடி அவர் எந்த நாளும் பூ வைத்துக் கொண்டவர் அல்லர். தாலியும் அணியாதவர். தாலியில்லாமல் திருமணம் செய்து கொண்டவர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் குடும்பம் எப்படிப்பட்ட புரட்சிக் குடும்பம் என்பது தெரியுமா? அக்குடும்பத்தில் எல்லோருமே சாதி மறுப்பு, மத மறுப்பு, ஏன் வேற்று மொழிக்காரர்கள்கூட குடும்ப உறவாக உள்ள சீர்திருத்தக் குடும்பம்.
அப்பபடிப்பட்ட ஒரு பகுத்தறிவு வாழ்விற்கு அடையாளமான ஆசிரியரையும் அவரது வாழ்விணையரையும், புகைப்படத்தில் மோசடி செய்து பொய்யான தகவலைப் பரப்பும் உங்களுக்கெல்லாம் சூடு, சொரணை, நேர்மை, மனச்சான்று என்று எதுவுமே கிடையாதா?
அந்தணர் என்று உங்களை அழைத்துக் கொள்கிறீர்களே அதுவே எவ்வளவு பெரிய மோசடி!
ஆரிய பார்ப்பான் அந்தணர் என்று யார் சொன்னது? நீங்களே மோசடியாக அழைத்துக் கொள்கிறீர்கள்.
அந்தணர் என்பது தமிழ்ச் சான்றோர்க்கு உரியது. அறநெறி பிறழா தமிழ்த் தொண்டர்களுக்கு உரியது. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் ஆதாரம் உண்டு.
அப்படியிருக்க உங்களைப் போய் அந்தணர் என்று அழைத்துக் கொள்வது பித்தலாட்டம் அல்லவா?
ஆக, மோசடி, பித்தலாட்டம், அயோக்கியத்தனம் இதுவே உங்கள் மூலதனம்!
நீங்கள் எங்களிடமே உங்கள் வேலையைக் காட்டுகிறீர்களா?
நாங்கள் எழுத ஆரம்பித்தால், நாறி விடும்! எச்சரிக்கை!